×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டது எப்படி? இரண்டு முறை துள்ளத்துடிக்க ஏற்றி பயங்கரம்.. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்..!

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டது எப்படி? இரண்டு முறை துள்ளத்துடிக்க ஏற்றி பயங்கரம்.. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்..!

Advertisement

 

அதிமுக நிர்வாகி மற்றும் சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிர்ச்சி வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், வெண்களூர் கிராமத்தில் வசித்து வந்த ஜெகபர் அலி (வயது 58) என்பவர், முன்னாள் அதிமுக கவுன்சிலர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். தற்போது அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளராக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அரசு அனுமதியின்றி நடைபெற்று வந்த கல்குவாரி முறைகேடு தொடர்பாக தொடர் புகார் அளித்து வந்தார். மதுரை நீதிமன்றத்திலும் வழக்கு சென்று, குவாரிக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: இவன் தான் அந்த சார் - போஸ்டருடன் களமிறங்கிய திமுக எம்.எல்.ஏக்கள்..!

போராட்ட எச்சரிக்கை

சமீபத்தில் சுமார் 20 ஆயிரம் லாரி அளவு கனிமவளம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், தாசில்தார் என பல இடங்களில் புகார் அளித்துள்ளார். இதனால் கனிமவளத்தை இரவோடு இரவாக அகற்றும் பணிகள் குவாரி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அலி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என எச்சரித்தார். 

முக்கியப்புள்ளிகள் கைது

இதனிடையே, கடந்த ஜன.17 அன்று ஜெகபர் அலி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது லாரி மோதி உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கல்குவாரி அதிபர்கள் இரண்டு பேர் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில், திருமயம் மினி லாரி உரிமையாளர் (வயது 56), தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். லாரி ஓட்டுநர் காசிநாதன் (வயது 45), ராசு (வயது 54), ராசுவின் மகன் தினேஷ் (வயது 28) கைது செய்யப்பட்டனர். மற்றொரு கல் குவாரி உரிமையாளர் ராமையா தேடப்பட்டு வருகிறார்.

பதறவைக்கும் பாணியில் கொலை

இந்நிலையில், லாரி உரிமையாளர் முருகானந்தம் அளித்த வாக்குமூலத்தில், "குவாரி உரிமையாளர்கள் ராமையா, ராசுவின் திட்டப்படி, ஜெகபர் அலியை நான் கொலை செய்தேன். மசூதிக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரும்போது, மினி லாரி ஓட்டுநர் காசிநாதனை கண்காணிக்கச் சொல்லி, தகவல் அளித்ததன் பேரில் மினிலாரி கொண்டு ஏற்றினோம். அவர் படுகாயத்துடன் முதல் முறை துடிதுடித்தார். இதனால் உயிர்பிழைத்துவதிலாம் என்ற அச்சத்தில், மீண்டும் இரண்டாவது முறை மோதி கொலை செய்தேன்" என கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: #Breaking: சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் உத்தரவு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pudukkottai #thirumayam #Social Activist Killed #அதிமுக #புதுக்கோட்டை #திருமயம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story