×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளிநாட்டில் கணவன் வேலை.. ஆண் நண்பரால் பெண்ணுக்கு பிரசவ வலி.. நடந்த வினோத சம்பவம்.!

Secret Pregnancy Ends in Tragedy: ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான மனைவி கோவிந்தம்மாள், கணவரிடம் கர்ப்பத்தை மறைக்க நாடகமாடியது இறுதியில் அம்பலமானது. 

Advertisement

குடும்பத்துக்காக வெளிநாட்டில் உழைத்த கணவனுக்கு மனைவி செய்த துரோகம் இறுதியில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, பிம்பலூர், காட்டுக்கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரின் மனைவி கோவிந்தம்மாள் (23). தம்பதிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தங்களுக்கு சொந்தமான வயலில் சொந்தமாக வீடுகட்டி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். 

'தொப்பை விழுந்தது'

கடந்த 16 மாதங்களுக்கு முன்னதாக மாலத்தீவுக்கு வேலைக்குச் சென்ற மணிகண்டன், சில நாட்களுக்கு முன்பு திடீரென சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, தனது மனைவியின் வயிறு பெரிதாக இருப்பதை கவனித்தனர், ஏன் வயிறு பெரிதாக உள்ளது? என கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தம்மாளோ, குழந்தைகளை கவனித்துக்கொண்டு வீட்டிலேயே இருப்பதால் தொப்பை விழுந்துவிட்டது என கூறியுள்ளார்.

மயங்கி கிடந்தார்: 

இந்நிலையில், கடந்த பிப். 07ம் தேதி இரவு நேரத்தில் தனது குழந்தைகள், கணவருக்கு கோவிந்தம்மாள் உணவு பரிமாறிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, வயிறு வலியால் இயற்கை உபாதைக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர், மீண்டும் வரவில்லை. சுமார் 11 மணியளவில் மனைவி வரவில்லை என்று காட்டுப்பகுதிக்கு சென்ற கணவர், ரத்தக்கறையுடன் மயங்கி கிடந்த மனைவியை மீட்டுள்ளார். 

டாக்டர்கள் ஷாக் தகவல்:

தைலத்தோப்பில் மயங்கி கிடந்த மனைவியை உறவினர்கள் உதவியுடன் மீட்ட மணிகண்டன், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார். மருத்துவர்கள் பெண்ணை பரிசோதனை செய்துவிட்டு, அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பெண் மயங்கி கிடந்த இடத்தில் குழந்தை இருக்கிறதா? என கண்டறிந்து வரக்கூறி அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். 

குழந்தை உடல் மீட்பு:

அங்கு முட்புதரில் உயிரிழந்த நிலையில் இருந்த சிசுவின் உடல் மீட்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினரும், இதுகுறித்து விசாரித்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வி.களத்தூர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிந்தம்மாளுக்கு ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமானது தெரியவந்தது.

ஆண் நண்பர் யார்?

கணவர் திடீரென ஊருக்கு வந்தபோது, அவரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் தொப்பை என கூறியுள்ளார். சம்பவத்தன்று உணவு பரிமாறியபோது, குழந்தையை விரைந்து பிரசவித்தால் அது இறந்துவிடும் என்ற எண்ணத்தில் எடுத்த முயற்சியில், கோவிந்தம்மாள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு மயங்கி கிடந்ததும் அம்பலமானது. குழந்தையை பிரசவித்தபின்னர் கோவிந்தம்மாள் மயங்கி இருக்கிறார். இதனால் கோவிந்தம்மாள் ஆண் நண்பர் யார்? குழந்தை கொலை செய்யப்பட்டதா? என பல கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட மணிகண்டன், குழந்தை பிறந்த பின்னர் தனது மனைவி மன்னிப்பு கேட்டிருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பேன் என காவல் துறையினரிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Perambalur #illegal affair #Husband Wife #கள்ளக்காதல் #பெரம்பலூர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story