திருப்பரங்குன்றம் மலையில் ஆடுகளை அறுத்து சமபந்தி விருந்து; இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்.!
திருப்பரங்குன்றம் மலையில் ஆடுகளை அறுத்து சமபந்தி விருந்து; இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்.!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில், ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள மலையின் ஒரு பகுதியில், தர்கா இருக்கிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராஜபாளையத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது குடும்பத்துடன் வந்து மலைமீதுள்ள தர்காவுக்கு சென்று ஆடு கந்தூரி கொடுக்க முற்பட்டுள்ளார்.
வழியிலேயே அவரை நிறுத்திய காவலர்கள், தர்காவுக்குள் சென்று பிரார்த்தனை நடத்த மட்டுமே அனுமதி. கந்தூரி உட்பட எந்த விஷயத்திற்கும் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர்.
ஆடு, கோழி அறுத்து சம்பந்தி விருந்து
இதனால் அங்கு பதற்ற சூழல் உருவாகி, நேற்று வரை வெவ்வேறு பெயர்களில் இஸ்லாமிய அமைப்பினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று மலைமீதுள்ள தர்காவில் ஆடு, கோழி ஆகிய கால்நடைகள் சமைத்து சமபந்தி விருந்து வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: "ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் ஜாதி., 10 பேர் சேர்ந்து என்னை தாக்கினார்கள்" - இளைஞர் கண்ணீர் பேட்டி.!
இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, இன்று அங்கு திரண்ட இஸ்லாமியர்கள் ஆட்டுக்குட்டியுடன் மலைமீதுள்ள தர்காவுக்கு செல்ல முற்பட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும், மலைமீதுள்ள தர்காவில் இறைவழிபாடு நடத்திக்கொள்ளுங்கள். அதே மலைமீது முருகன் கோவில் உள்ளதால் கால்நடைகளை பலிகொடுப்பது, சமைத்து சாப்பிடுவது என எந்த விஷயத்திற்கும் அனுமதி இல்லை என தெரிவித்தனர். சுமார் அரைமணிநேர வைக்கவுத்தத்திற்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து அங்கு பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் மரணம்; பெற்றோரை பார்த்த ஆவலில், அடுத்த நொடி நடந்த சோகம்.!