13 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரம்.. வெளியான பரபரப்பு பின்னணி.!
Madurai Thirumangalam Gang Rape News: திருமங்கலத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
13 வயது காதல்?
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய சிறுமி, பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன் சிறுமியிடம் பேசி வந்த நிலையில், காதலிப்பதாக கூறி இருக்கிறார். இதன்பேரில் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 24ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு சிறுவன் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: Sexual Abuse: பள்ளி மாணவி கர்ப்பம்.. காமுக பூசாரி அதிர்ச்சி செயல்.. வயிற்றிலேயே இறந்த சிசு.!
பாலியல் வன்கொடுமை:
இவர்களுடன் 16 வயது சிறுவனின் நண்பர்கள் இருவர், 13 வயது சிறுவன் என மொத்தமாக 4 பேர் சென்றுள்ளனர். பொருட்காட்சிக்கு சென்றுவிட்டு அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற கும்பல் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. வீட்டுக்கு வந்த சிறுமி நடந்ததை கூறி அக்காவிடம் கதறியழுத நிலையில், சிறுமியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அனைவரும் கைது:
இதன்பேரில் போக்ஸோ சட்டத்தில் 4 சிறார்களும் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கைதான சிறார்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முடிவிலேயே சிறுமியின் வன்கொடுமை தொடர்பான விபரம் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சாக்லேட் கொடுப்பதாக நடந்த கொடுமை.. அலறி ஓடிவந்து கதறிய சோகம்.!