இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. தமிழகத்தில் திடுக்கிடவைக்கும் சம்பவம்.. சிறுவன் உட்பட ஐவர் கும்பல் அதிர்ச்சி.!
Virudhunagar News: இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலை தருவதாக இளம்பெண்ணை கடத்திச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் மதுரையில் அரங்கேறியுள்ளது.
கட்டிட வேலை செய்கிறார்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் முடிந்து மகன், மகள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெண் தனியாக வசித்து வருகிறார். கட்டிட வேலைகளுக்கு சென்று வருவது இவரின் வழக்கம்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் கொடூரம்.. ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. தலைநகரில் அதிர்ச்சி.!
இளம்பெண்ணின் தகவல்:
இவரின் வீட்டுக்கு அருகே வசித்து வரும் இளம்பெண் ஒருவர், மதுரையில் உள்ள மேலூரில் வசித்து வரும் மூதாட்டியை கவனித்துக்கொள்ள ஆட்கள் வேண்டும் என கூறியுள்ளார். பெண்ணும் வேலைக்குச் செல்ல சம்மதிக்கவே, அவரை தொடர்புகொள்ள பெண் செல்போன் நம்பர் வாங்கியுள்ளார்.
இளைஞர் அதிர்ச்சி செயல்:
பின் மேலூருக்குச் சென்ற இளம்பெண்ணை 18 வயது இளைஞர் அழைத்துக்கொண்டுள்ளார். அவர் தும்பைப்பட்டி, தாமரைப்பட்டி கண்மாய் வழியாக சென்ற நிலையில், திடீரென 4 இளைஞர்களிடம் இளம்பெண்ணை ஒப்படைத்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கூட்டுப்பாலியல் பலாத்காரம்:
இளைஞர்கள் நான்கு பேரும் சேர்ந்து பெண்ணை மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அவரின் அரைபவுன் தங்க சங்கிலி, தங்கக்குண்டு, வெள்ளிக்கொலுசு, செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். கையில் பணம் இல்லாமல் பெண்மணி மேலூர் வரை நடந்து வந்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்:
பின் இதுதொடர்பாக மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்குப்பின் அதே ஊரைச் சேர்ந்த 18 வயது சிறுவன், வினித் (வயது 21), செல்வகுமார் (வயது 33), அரவிந்த் (வயது 26), வீரபாண்டி (வயது 30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நண்பரை அழைத்து வந்து நடந்த கொடுமை.. கோவையில் ஷாக்.!