×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்தி பைத்தியமா இவன்... பாட்டியை கொன்று எரித்ததாக சரணடைய வந்த நபர்... விசாரணையில் வெளியான உண்மை.!

ஆத்தி பைத்தியமா இவன்... பாட்டியை கொன்று எரித்ததாக சரணடைய வந்த நபர்... விசாரணையில் வெளியான உண்மை.!

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் ஒரு பாட்டியை எரித்துக் கொன்று விட்டதாக கூறி சரண் அடைய வந்த வாலிபரால்  பதற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு காவல்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையின் போது தான் உண்மை சம்பவம் தெரிய வந்திருக்கிறது.

நேற்று கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்திற்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் காவல்துறை அதிகாரிகளிடம் தனக்கு சொந்தமாக ஒரு மாந்தோட்டம் இருப்பதாகவும் அங்கு மாங்காய் திருட வந்த பாட்டியை தான் கல்லால் அடித்துக் கொன்று விட்டதாகவும் கூறினார். இதனைக் கேட்ட காவல்துறை அதிகாரிகள் பதற்றம் ஆயினர். மேலும் தொடர்ந்து பேசிய அந்த நபர் அதனால் சரணடைய வந்ததாகவும் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை அழைத்துக் கொண்டு அவர் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு கொலை நடந்ததற்கான எந்த தடையும் இல்லை . மேலும் சடலமும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அந்த நபரிடம் கேட்டபோது சடலத்தை எரித்து விட்டதாக கூறினார்.

அதன் பிறகு காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தான் உண்மை தெரிய வந்திருக்கிறது. அந்தப் பகுதியில் அப்படி ஒரு கொலை சம்பவம் நடக்கவில்லை. மேலும் காவல்துறையிடம்  சரணடைய வந்த நபர்  மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்திருக்கிறது . இதன் காரணமாக காவல்துறை அதிகாரிகள் குழப்பத்திற்கு உள்ளாகினர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #kanyakumari #murderinvestigation #policeenquiry #mentallyill
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story