தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்ஸ்டா காதலில் விழுந்த மகளுக்கு முட்டை பொரியலில் பாய்சன்.. தாயின் செயலா இது? மாணவி உயிர் ஊசல்..! தமிழகமே ஷாக்.!

இன்ஸ்டா காதலில் விழுந்த மகளுக்கு முட்டை பொரியலில் பாய்சன்.. தாயின் செயலா இது? மாணவி உயிர் ஊசல்..! தமிழகமே ஷாக்.!

in-kallakurichi-sankarapuram-college-girl-murder-attemp Advertisement

 

காதலில் விழுந்த மகளுக்கு முட்டை பொரியலில் விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற தாயின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், புதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் மல்லிகா. இவருக்கு கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கிறார். எப்போதும் இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யும் பழக்கம் கொண்ட சிறுமி, அதன் வாயிலாக காதலும் வயப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: சாகசத்தால் சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்.!

கல்லூரி மாணவியும், அவருக்கு இன்ஸ்டாகிராமில் அறிமுகமான சாய் குமார் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகளின் காதல் விஷயம் மல்லிகாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு முற்றவே, காதலில் உறுதியாக இருந்தால் எலி பேஸ்ட்டில் விஷம் வைத்து கொலை செய்துவிடுவேன் என மல்லிகா மிரட்டி இருக்கிறார். 

Kallakurichi

வாயில் நுரை தள்ளி உயிருக்கு போராட்டம்

இந்த விஷயத்தில் தாய் - மகள் வாய் தகராறு முற்றவே, ஆத்திரத்தில் முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்து மகளுக்கு மல்லிகா கொடுத்துள்ளார். இது தெரியால் முட்டை பொரியல் சாப்பிட்ட மாணவி வாயில் நுரைதள்ளி மயங்கி இருக்கிறார். 

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்க, தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவியின் வாக்குமூலத்தை பெற்று, மல்லிகாவை மகளை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

விவேக் காமெடி ஒன்றில் தாய்க்கிழவி பாயசத்தில் விஷத்தை கலந்து கிழவனை கொலை செய்ததாக பேசி இருப்பார். இதுதொடர்பான சம்பவத்தை போல மேற்கூறிய சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் ஆவேசம்; மனைவிக்கு கழுத்தில் வெட்டு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kallakurichi #tamilnadu #instagram love #Egg Podimas #கள்ளக்குறிச்சி #இன்ஸ்டாகிராம் காதல் #முட்டை பொரியல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story