×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாயுடன் கள்ளக்காதல்.. ஐவர் கும்பலால் துள்ளத்துடிக்க கொலை.. கோவையில் பயங்கரம்.!

Coimbatore News: கள்ளக்காதல் உறவில் இருந்த நபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Advertisement

வேலைக்கு வந்த இடத்தில் உரிமையாளரின் மனைவியை அபகரித்ததாக தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

பேக்கரி:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் திருப்பத்தூரைச் சேர்ந்த பூவரசன் (வயது 30) என்பவர் வேலை பார்த்து வருகிறார். பேக்கரி உரிமையாளருக்கு மனைவி இருக்கிறார்.

இதையும் படிங்க: மனைவி வெளியே போன கேப்பில் கள்ளக்காதலியுடன் ஜல்சா.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக்கொலை.!

கள்ளக்காதல்:

இதனிடையே, வேலைக்கு வந்த இடத்தில் பூவரசன் உரிமையாளரின் மனைவியுடன் நெருக்கம் காண்பித்து இருக்கிறார். இந்த பழக்கம் பின்னாளில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இந்த தகவலை அறிந்த பேக்கரி உரிமையாளர் பூவசரனை கண்டித்துள்ளார். 

ஐவர் கும்பல்:

பின் சுமார் 2 மாதங்களுக்கு முன் வேலையில் இருந்தும் நிறுத்தி இருக்கிறார். இதனிடையே, நேற்று பூவசரன் போதையில் மார்க்கெட் சாலையில் வந்துகொண்டு இருந்தார். அப்போது, பேக்கரி கடை உரிமையாளரின் மகன்கள் மற்றும் நண்பர்கள், 17 வயதுடைய சிறுவன் பூவரசனை வழிமறித்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

உயிரிழப்பு & கைது:

இவர்களுக்குள் உண்டாகிய வாக்குவாதம் காரணமாக, ஐவரும் சேர்ந்து பூவரசனை தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பூவரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய மாணவர் உட்பட ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #Crime news #Coimbatore
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story