தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவனுடன் ஓரின சேர்க்கை. மனைவியுடன் கள்ள தொடர்பு! 19 வயது இளைஞரின் மன்மத லீலை! இறுதியில் நடந்தது என்ன?

Illegal relationship men and wife arrested

illegal-relationship-men-and-wife-arrested Advertisement

கள்ள தொடர்பு காரணமாக மனைவியும் அவரது கள்ள காதலனும் சேர்ந்து கணவனை கொன்றது போலிஷ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 தமிழ்நாடு மாநிலம், பண்ட்ருட்டியை சேர்ந்தவர் ராமன் (34). இவரது  மனைவி அனிதா. கடந்த 14-ஆம் தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்ற ராமன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் முத்திரிக்காட்டில் பிணமாக தொங்கிய நிலையில் கடந்த 22 தேதி பிணமாக மீட்கப்பட்டார். இவரது சாவில் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். 

இந்நிலையில்  ராமனின் செல்போனை சோதனை செய்ததில் அவர் சந்தோஷ்குமார் (19) என்ற கல்லூரி மாணவருடன் அடிக்கடி போனில் பேசியது தெரியவந்தது.

illegal affairs

இதில் சந்தேகமடைந்த போலீசார் இதையடுத்து சந்தோஷ்குமாரை பிடித்து விசாரித்ததில் அவர் ராமனை கொன்றதை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஒரு திருமண விழாவில் ராமனும், அனிதாவும் கலந்து கொண்ட போது நானும் கலந்து கொண்டேன்.

இதிலிருந்து நான் அவர்களுடன் நட்பாகி அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்றேன்.

அப்போது தான் ராமன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர் என தெரியவந்தது.

என்னை அவர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நிலையில் நானும் சம்மதித்தேன்.

இதற்கிடையே, அனிதாவுக்கும் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

எங்கள் கள்ளகாதலுக்கு ராமன் இடையூறாக இருந்தார்.

ஒருகட்டத்தில் எங்கள் ஓரின சேர்க்கை விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும் என நினைத்து இதற்கு என்ன செய்யலாம் என அனிதாவிடம் யோசனை கேட்டேன்.

அப்போது அவர், ராமனை தீர்த்துக் கட்டிவிடலாம் என்று தெரிவிக்க, அதன்படி ராமனை தனியாக அழைத்து சென்றேன்.

அங்கு இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பின்னர் மதுவில் தூக்க மாத்திரை கலந்து அவருக்கு கொடுத்தேன்.

அவர் மயங்கியவுடன் கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்குபோட்டு தற்கொலை செய்தது போல் இருப்பதற்காக உடலை கயிற்றில் கட்டி மரத்தில் தொங்க விட்டேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து சந்தோஷ்குமாரையும், அனிதாவையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affairs #murder case #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story