அதுதான் இந்த லவ் பாட்டு! அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு இளையராஜா போட்ட ஆட்டம் இருக்கே! நைட் 3 மணி ஆச்சு.. ரஜினிகாந்த் சொன்ன சுவாரஷ்யங்கள்!
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகள் திரையிசை பயணத்தை கொண்டாட தமிழக அரசு சிறப்பு விழா நடத்தியது. விழாவில் ரஜினி-இளையராஜா நகைச்சுவை உரையால் அரங்கம் குலுங்கியது.
திரையுலக இசையில் மறக்க முடியாத பங்களிப்பை செய்த இளையராஜா தனது 50 ஆண்டு சாதனையை கடந்ததை ஒட்டி, சென்னை நகரில் தமிழக அரசு சார்பில் பெரும் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இந்த விழா தமிழ்ச் சமூகத்துக்கும் இசை ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்தது.
சிறப்பு விழா நிகழ்வுகள்
"சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று பெருமை சேர்த்தனர்.
இளையராஜா – ரஜினி நகைச்சுவை
விழாவில் உரையாற்றிய இளையராஜா, ரஜினிகாந்த் அழைத்தபோது நடந்த உரையாடல்களை நகைச்சுவையுடன் பகிர்ந்தார். இந்நிலையில் ஜானி படத்திற்கு இசையமைக்கும்போது நானும் மகேந்திரனும் குடிச்சோம். இளையராஜாவிடம், நீங்களும் குடிக்கிறீர்களா? என்று கேட்டோம். அவர் ஓகே சொன்னார். அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு 3 மணி நைட்டுக்கு வரை ஆடிய ஆட்டம்… இருக்கே! அப்போ இருந்தவரு, இப்போ பெரிய காதலன் ஆகிட்டாரு. அதான் இந்த லவ் பாடல்கள்… இன்னும் நிறைய இருக்கு, அடுத்தவாட்டி சொல்ல்றேன எனக் கூறினார். அதனை தொடர்ந்து ரஜினிகாந்தும் மேடையில் பழைய சம்பவங்களை சிரிப்பூட்டும் விதத்தில் நினைவுகூர்ந்தார். அவரின் உரை முழு அரங்கத்தையும் சிரிப்பலையில் மூழ்கடித்தது. பின்னர் இளையராஜா, “இல்லாததையும் ரஜினி அடிச்சுப் போறாரு!” என சிரிப்பை கூட்டினார்.
இதையும் படிங்க: பெரும் சோகம்! திமுகாவின் இலக்கிய மாமணி அர. திருவிடம் காலமானார்! அரசியல் தலைவர்கள் இரங்கல்...
இளையராஜாவின் இசைப் பயணம்
1,400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, பல்வேறு தேசிய, மாநில, பத்ம விருதுகளைப் பெற்றவர் இளையராஜா. தமிழ்த் திரைப்பட இசையில் “இசைஞானி” என மதிப்படையும் இவர், 80-வது பிறந்த நாளையும், 50 ஆண்டுகள் திரையிசை சாதனையையும் கொண்டாடி வருகிறார்.
தமிழ் இசைத்துறையின் வரலாற்றில் என்றும் நிலைக்கும் இந்த பொற்கால நிகழ்வு, இளையராஜாவின் கலைப் பயணத்திற்கு ஒரு பெரும் பெருமை சேர்த்தது.
இதையும் படிங்க: மலைக்கோட்டை பிள்ளையார்! அனல் பறக்கும் தவெக தலைவர் விஜயின் பேச்சு! 2026 தேர்தலுக்காக அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்!