×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆளுநரை தொடர்ந்து விமர்சித்தால்... பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்; எச்.ராஜா எச்சரிக்கை..!!

ஆளுநரை தொடர்ந்து விமர்சித்தால்... பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்; எச்.ராஜா எச்சரிக்கை..!!

Advertisement

ஆளுநர் உரையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறிவிட்டு படிக்கச் சொன்னால் ஆளுநர் எப்படி படிப்பார்.  

திருச்சியில் இன்று பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய உரையில், தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பிரமுகர்களின் 18 பேர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் தமிழகத்தில் கஞ்சா அதிகமாக பிடிப்படுகிறது.

இதுபோல பல சம்பவங்கள் நடந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு காணப்படுகிறது. அந்நிய முதலீட்டை தமிழகம் அதிகமாக ஈர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் கர்நாடகத்தில் 18 பில்லியன் டாலரும், மகாராஷ்டிராவில் 11.6 பில்லியன் டாலரும் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 

ஆனால் தமிழகத்திற்கு 2.5 பில்லியன் டாலர் மட்டுமே அந்நிய முதலீடு வந்துள்ளது. இதுபோன்ற ஆளுநர் உரையில் கூறிவிட்டு, படிக்கச் சொன்னால் ஆளுநர் எப்படி படிப்பார். இந்நிலையில், தொடர்ந்து ஆளுநரை கண்டித்து வருகின்றனர். ஆனால் முதல்வர், தற்போது ஆளுநரை கண்டித்து பேசக்கூடாது என்று கூறியுள்ளார். 

முதல்வர், நிலைமை புரிந்ததனால் அவ்வாறு கூறியுள்ளார்.  ஆளுநரை தொடர்ந்து எதிர்த்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆளுநரை விமர்சிப்பதை திமுகவினர் நிறுத்திக் கொண்டால் அவர்களது அரசை காப்பாற்றிக் கொள்ளலாம். 
திருமாவளவன் நடத்திய பேரணிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் ஆர்எஸ்எஸ் நடத்தும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

தமிழ் புத்தாண்டு நமக்கு சித்திரையில் தான். பொங்கல் பண்டிகை இந்துக்கள் பண்டிகை. இது நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மஞ்சுவிரட்டு, ஏர் தழுவுதல் எல்லாம் நமது பாரம்பரியமாகும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #H. Raja #interview #Criticize the governor #Stop DMK
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story