இன்று முதல் Gpay, PhonePe-யில் பணம் அனுப்பினால் கட்டணம்! எந்தெந்த வங்கிகளுக்கு தெரியுமா?
ICICI வங்கி UPI பரிவர்த்தனைகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் கட்டணம் வசூலிக்க முடிவெடுத்துள்ளது. வணிகர்களுக்கு புதிய கட்டண விதிகள் அமலாகும்.
UPI பரிவர்த்தனைகள் இந்தியாவில் தீவிரமாக பயன்படுத்தப்படும் நிலையில், முக்கிய வங்கிகளில் ஒன்றான ICICI வங்கி தற்பொழுது புதிய கட்டண விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த அறிவிப்பால் வணிகர்கள் மற்றும் பண பரிமாற்ற சேவையாளர்களிடையே கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ICICI வங்கியின் புதிய கட்டண விதிகள்
ICICI வங்கி அறிவித்துள்ளபடி, ஆகஸ்ட் 1 முதல் Escrow கணக்குடன் உள்ள Payment Aggregator (PA) க்களிடமிருந்து, ஒவ்வொரு UPI பரிவர்த்தனைக்கும் 0.02% கட்டணம் வசூலிக்கப்படும். இதன் அதிகபட்ச கட்டணம் ரூ.6 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Escrow கணக்கு இல்லாத PA களுக்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.04% கட்டணம் வசூலிக்கப்படும். இதன் அதிகபட்ச கட்டணம் ரூ.10 ஆகும். இதன் மூலம் வங்கிகள் தங்களின் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்ட முனைகின்றன.
இதையும் படிங்க: தங்கம் விலை குறையுமா?அதிகரிக்குமா? எப்போது குறையும் என தெளிவாக கூறிய பொருளாதார நிபுணர் சீனிவாஸ்....
யாருக்கு கட்டணம் இல்லையா?
வணிகரின் ICICI வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும்சில வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை. இதனால், சில வணிகர்கள் வாடிக்கையாளர் நேரடி பரிவர்த்தனையை ஊக்குவிக்கலாம்.
முன்னதாக நடைமுறைப்படுத்திய வங்கிகள்
இதேபோல், யெஸ் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்றவை கடந்த 8-10 மாதங்களாக UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்களை எடுக்க தொடங்கியுள்ளன. ICICI வங்கி இப்போது அதே பாதையை பின்பற்றியுள்ளது.
பண பரிவர்த்தனையில் தகுந்த கட்டண முறைகள் செயல்படுத்தப்படுவதால் வணிகர்கள் இந்த மாற்றத்திற்கேற்ப தங்களின் பணி நடைமுறைகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். UPI வசதியால் பயனர்களுக்கு இலவசம் என்றாலும், வங்கிகள் செலவுகளை மீட்டெடுக்கும் புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றன.
இந்த கட்டண முறை முழுமையாக அமலுக்கு வந்த பிறகு, அதன் தாக்கம் வணிக சூழலிலும், UPI பரிமாற்றத் தரவுகளிலும் மாற்றத்தை உருவாக்கக்கூடும். வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இது பற்றிய தெளிவான புரிதல் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்! அதிரடியாக குறைந்த வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை!