×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாமியார் செய்த செயலால் மனமுடைந்த மருமகன்!. மகனுடன் சேர்ந்து மாமியார் செய்த வேலை!.

husband suicide for mother in law

Advertisement

சென்னை புழல் பகுதியை சேர்ந்த ராஜு  என்பவர் கார் ஓட்டுநராக இருந்துள்ளார். இவருக்கும், இவரது மனைவி பிரீத்திக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் விரக்தியடைந்த ராஜுவின் மனைவி  பிரீத்தி, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட குடும்பத்தினர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து ராஜு, சிகிச்சை பெரும் மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அவரது மைத்துனர்கள் மற்றும் மாமியார் ராஜூவை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அடித்து அவமானப்படுத்தியுள்ளனர்.

மாமியார் மற்றும் மைத்துனர்கள் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதால் மனமுடைந்த ராஜு அன்றிரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்வதற்கு முன், அவரது வீட்டு சுவரில், என் சாவுக்கு, மைத்துனர் பசுபதி, பவித்ரன்  மற்றும் மாமியார் லதா தான் காரணம் என எழுதி வைத்திருந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #husband and wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story