நெல்லையில் மீண்டும் பயங்கரம்... மனைவி, மகன் எரித்து கொலை.!! அதிர வைக்கும் பின்னணி.!!
நெல்லையில் மீண்டும் பயங்கரம்... மனைவி, மகன் எரித்து கொலை.!! அதிர வைக்கும் பின்னணி.!!
திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் மகன் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தந்தையும் தீக்காயம் அடைந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் காரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரியா. 66 வயதான இவருக்கு திருமணமாகி மெர்சி என்ற மனைவியும் ஹென்றி, ஹார்வி என்ற 2 மகன்களும் ஹெலன் என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்கரியா மற்றும் மெர்சி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மெர்சி தனது மகன்கள் மற்றும் மகளுடன் அதே தெருவில் வேறு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இந்த தம்பதியினரின் மூத்த மகனான ஹென்றிக்கு, மெர்சி திருமண ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த ஏற்பாட்டில் அவரது கணவர் சக்கரியாவிற்கு உடன்பாடில்லை என்று தெரிகிறது. மேலும் மெர்சி தனது மகனின் திருமணத்திற்கு சக்கரியாவை கூப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மெர்சி தனது கணவர் வீட்டிலிருந்த சில பொருட்களை எடுப்பதற்காக தனது இளைய மகன் ஹார்வியுடன் சக்கரியா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது ஆத்திரத்திலிருந்த சக்கரியா தனது மனைவி மற்றும் மகனை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்.
இதையும் படிங்க: எமனாக மாறிய லிவிங் டுகெதர் உறவு... கள்ளக்காதலி உயிருடன் எரித்து கொலை.!!
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் மெர்சி மற்றும் ஹார்வி இருவரும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளனர். சக்கரியாவின் மீதும் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் தீயை அணைத்து இறந்த நபர்களின் சடலங்களை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீக்காயமடைந்த சக்கரியாவிடம் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நெல்லையில் நடந்த கௌரவக் கொலை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அதன் அதிர்ச்சி மறைவதற்குள் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தை அதிர செய்திருக்கிறது.
இதையும் படிங்க: "ம்ம்மா... எரியுதுமா விட்டுடு..." எரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.!! தாய் தற்கொலை.!!