"குடும்பம் நடத்த வரமாட்டியா... " சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம்.!! பட்டப்பகலில் இளம் பெண் கொலை.!!
குடும்பம் நடத்த வரமாட்டியா... சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரம்.!! பட்டப்பகலில் இளம் பெண் கொலை.!!
பொள்ளாச்சியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபரை பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்துள்ள காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ.பி.டி ரோட்டில் வசித்து வந்தவர் ஸ்வேதா. இவருக்கு பாரதி என்ற நபருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பாரதி மற்றும் ஸ்வேதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஸ்வேதாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பாரதி அவரிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் பாரதியை பிரிந்த ஸ்வேதா தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வேலைக்கு கிளம்பிய ஸ்வேதாவை ரோட்டில் வைத்து வழிமறித்த பாரதி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியிருக்கிறார். இது தொடர்பில் இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பாரதி தான் வைத்திருந்த கத்தியால் குத்தி ஸ்வேதாவை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்து தப்பியோட முயற்சித்திருக்கிறார். ஸ்வேதாவின் அலறல் சத்தம் கேட்டு கொலை நடந்த இடத்தை சூழ்ந்த பொதுமக்கள் பாரதியை மடக்கி பிடித்தனர்.
இதையும் படிங்க: "அம்மாவ தப்பா பேசுவியா நீ..' 75 வயது முதியவர் கொடூர கொலை.!! பரபரப்பு பின்னணி.!!
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஸ்வேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட பாரதியை கைது செய்த போலீஸ் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!