மனைவி மீது கொண்ட அதீத உரிமையால், கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்!
Husband killed wife in chennai saidapet for family problem
சென்னை சைதாப்பேட்டையில் குடும்பப்பிரச்சினையில் சகித்துக்கொள்ள முடியாத கணவன், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக். எலெக்ட்ரிசியனாக வேலைபார்த்துவந்துள்ளார்.36 வயதாகும் கார்த்திக்கிற்கு 32 வயதில் சௌமியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் கார்த்திக் தன் மனைவி மீது அதிக உரிமை எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. தனது மனைவி தன்னுடன் மட்டும்தான் பேசவேண்டும், பழகவேண்டும் என நினைத்துள்ளார்.
இதனால் கடந்த ஆறுமாதகாலமாக இருவருக்குமிடையே அதிக அளவில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கணவருடன் கோபித்துக்கொண்டு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார் சௌமியா.
இந்நிலையில் ஒருவாரம் ஆகியும் தனது மனைவி வீட்டிற்கு வராததால் மனைவியை சமாதானம் செய்து அழைத்துவர மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார் கார்த்திக். சமாதானம் தோல்வியை அடைந்ததை அடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே மாமனார், மாமியார் கண்முன்னே இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இருவரையும் சோதித்த மருத்துவர்கள் சௌமியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்கொலைக்கு முயற்சித்த கார்த்திக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.