தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோயிலுக்குச் செல்லும் வழியில் மனைவியை கொடூரமாக எரித்துக்கொன்ற கணவன்! வெளிவந்த பதறவைக்கும் காரணம்!

husband killed wife for not having baby

husband-killed-wife-for-not-having-baby Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருச்சி மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரது சடலம் கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வந்துள்ளனர். 

இதற்கிடையில் விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர்பகுதியில் ராம்குமார் என்பவர் தனது மனைவியை கொன்றுவிட்டதாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. 

Murder

பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். அவரது மனைவி பானுரேகா.இவர்களுக்கு திருமணமாகி ஓர் ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் இதுவரை அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் ராம்குமார் அடிக்கடி பானுரேகாவிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
 இந்த நிலையில் உறவினர்கள் கோவிலுக்கு சென்றால் சரியாகிவிடும் என்று கூறியதை கேட்டு ராம்குமார் மற்றும் பானுரேகா தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் திருச்சி மலைக்கோட்டை மற்றும் சமயபுரம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.அப்பொழுது இடையே இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் பானுரேகாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க டூவீலரில் இருந்த பெட்ரோலை மனைவி மீது ஊற்றி   தீவைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #baby
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story