×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியை காணாமல் கதறிதுடித்த கணவன்!! சினிமாவையும் மிஞ்சி அடுக்கடுக்காக அம்பலமான பகீர் பின்னணிகள்!!

husband killed wife for illegal affairs

Advertisement

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி சூர்யகுமாரி. இந்நிலையில் சிவசங்கரன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது மனைவியை காணவில்லை என  தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் சிவசங்கரனின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து போலீசார் விசாரணைக்காக சிவசங்கரனிடம்  செல்போனை தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவர் தனது செல்போன் தொலைந்துவிட்டதாக கூறியுள்ளநிலையில் போலீசாருக்கு அவர் மீது மேலும் சந்தேகம் அதிகமானது.

இதற்கிடையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரெயில்வேநகர் பகுதியில் சாக்குமூட்டை ஒன்று எரிந்துகொண்டிருந்துள்ளது இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சாக்குமூட்டையை அணைத்து சோதனையிட்ட போது, அதில், ஒரு பெண் பிணம் முழுவதுமாக எரிந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.ஆனால் அவரை குறித்த எந்த தகவலும் போலீசாருக்கு தெரியவரவில்லை.

இந்நிலையில் சிவசங்கரனின் போன் கடைசியாக எங்கு பயன்படுத்தப்பட்டது என டிரேஸ் செய்த போலீசார் கொடை நாடு பகுதியில் பயன்படுத்தியதை கண்டுபிடித்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்குள்ள காவல்நிலையத்தில் விசாரித்ததில் பெண் பிணம் கிடைத்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து சிவசங்கரிடம் விசாரணை மேற்கொண்டதில் எனது மனைவிக்கும், வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதையறிந்தது அவரை கண்டித்தேன். ஆனால் எனது மனைவி கள்ளக்காதலை கைவிடவில்லை.

   

இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி தூங்கிக்கொண்டிருந்த சூரியகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன். பின்னர் அவருடைய உடலை சாக்குமூட்டையில் கட்டி கொடைரோடு அருகே, ரெயில்வே நகர் பகுதியில் போட்டேன். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் எனது செல்போனை வீசிவிட்டு தான் தோன்றிமலைக்கு திரும்பிவிட்டேன் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affairs #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story