×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தூங்கிக்கொண்டிருந்த மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த நபர்.! வெறித்தனத்துடன் துடிதுடிக்க கணவர் செய்த காரியம்!!

husband killed man to disturbing wife

Advertisement

ஈரோடு மாவட்டம் அவ்வையார் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் லாரி டிரைவராக உள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் மணிமோகன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த விஜயகுமார் செல்வியை எழுப்பி உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி அலறி உள்ளார். இந்நிலையில் உஷாரான விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

இந்நிலையில் நடந்தவற்றை கேட்டு ஆத்திரம் அடைந்த மணிமோகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் முழுவதும் தேடியுள்ளார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் அவ்வையார் பாளையம் பகுதியில் வந்த விஜயகுமாரை கண்ட மணிமோகன் மற்றும் அவரது நண்பர்கள் அவரை துரத்திபிடித்து ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து துடிதுடித்த விஜயகுமார்  வாயில் மேற்கொண்டு வி‌ஷத்தை ஊற்றியுள்ளனர்.பின்னர் மோட்டார் சைக்கிளால் அவரது கழுத்தில் ஏற்றியுள்ளனர். இதில் சிறிது நேரத்தில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

அதனை தொடர்ந்து இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த விஜயகுமாரை கண்டவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மணி மோகன் மற்றும் சதிஸ்குமார் பூபதிராஜா, நாகராஜ்ஆகிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Wife #killed
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story