அதுக்கு வர மறுத்த மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்! சேலத்தில் கொடூரம்!
Husband killed his wife who refused relationsip

உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கணவன் காலால் மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மாதேஸ்(27). இவர் கம்பி கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
மாதேசுக்கும், சேலம் இரும்பாலை தளவாய்பட்டியை சேர்ந்த வடிவேல்-பச்சியம்மாள் தம்பதியின் மகள் சசிகலா(23) இருவர்க்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சசிகலாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
அறுவை சிகிச்சை என்பதால் குழந்தை பிறந்து ஏழு மாதங்கள் ஆகியும் சசிகலா தனது தாயார் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியை காண மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார் மாதேஷ். மருமகன் வந்திருப்பதால் தொந்தரவு கொடுக்க வேண்டாம் எனக்கருதி அவர்கள் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தனது மனைவியுடன் தனிமையில் இருந்த மாதேஷ் தனது மனைவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து நான் இன்னும் குணமாகவில்லை எனவே தற்போது வேண்டாம் என சசிகலா கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாதேஷ் தனது மனைவியின் கழுத்தில் காலை வைத்து மிதித்து கொன்றுள்ளார். சத்தம் கேட்டு ஒடி வந்த அக்கம் பக்கத்தினர் மாதேசுக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.