2 மனைவிகளுடன் கள்ளத்தொடர்பு... உறவினரை கொன்ற கணவன்.!! 5 பேருக்கு வலைவீச்சு.!!
2 மனைவிகளுடன் கள்ளத்தொடர்பு... உறவினரை கொன்ற கணவன்.!! 5 பேருக்கு வலைவீச்சு.!!
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள மேல் குத்தவக்கரையை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் அஞ்சலி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதே கொள்ளிடம் பகுதியை சேர்ந்த ராஜா என்ற நபருக்கு சசிகலா, சத்யா என்ற 2 மனைவிகள் உள்ளனர். ராஜாவும் லட்சுமணனும் உறவுக்காரர் என்பதால் நாளடைவில் ராஜாவின் இரு மனைவிகளுடனும் லட்சுமணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கள்ளத்தொடர்பை பற்றியறிந்த ராஜா, தன் மனைவிகளுடனான கள்ளதொடர்பு வெளியே தெரியாமலிருக்க லட்சுமணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும பணம் தராவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனால் பயந்து போன லட்சுமணன், ஆவடி பகுதியில் தலைமறைவாக வசித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று காலை கொள்ளிடம் அருகே லட்சுமணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது மேற்கொண்ட விசாரணையில், தலைமறைவாக வசித்து வந்த லட்சுமணனை, ராஜா மற்றும் அவரது நண்பர்கள் பல மாதங்களாகத் தேடி வந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால், ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லட்சுமணனின் மனைவி சந்தித்து, "உனது கணவர் இருக்கும் இடம் எங்கே?" என்று கேட்டு தெரிந்து கொண்டு இந்த கொலையை செய்ததாக அறியப்படுகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் பயங்கரம்... "இரவில் வந்த காதலன்..." சடலமாக மீட்கப்பட்ட திருநங்கை.!!
இதன்படி ராஜா மற்றும் அவரது நண்பர் வல்லம்படுகையைச் சேர்ந்த ராகுல் உள்பட 4 பேர் கொண்ட கும்பல், லட்சுமணனை கொள்ளிடத்திற்குக் கடத்தி வந்துள்ளனர். பின்னர் அவரை அரிவாளால் கழுத்தையறுத்து கொலை செய்து உடலை அருகேயுள்ள வாய்க்காலில் வீசிச் சென்றுள்ளனர். இதற்கடுத்து கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு ராஜா மற்றும் அவரது நண்பர் ராகுல் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்..." 5 வயது சிறுவன் கொலை.!! தந்தை தலைமறைவு.!!