மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு கணவர் செய்த காரியம்.! அதிர்ச்சி சம்பவம்.!
மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு கணவர் செய்த காரியம்.! அதிர்ச்சி சம்பவம்.!
மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அவரது மனைவி ரேகா மற்றும் அவரது குழந்தையுடன் செங்கல்பட்டு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளனர். ராஜேஷுக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த கத்தியால் தனது மனைவி ரேகாவின் கழுத்திலும், கையிலும் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் தன்னைத்தானே கத்தியால் ராஜேஷ் தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார். கணவன் மனைவி இருவரும் ரத்த காயத்துடன் அலறல் சத்தம் போட்டுள்ளனர்.
இவர்களது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த கணவன், மனைவி இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.