×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் முடிந்து நான்கே மாதத்தில் கணவன் மனைவி தற்கொலை! பதறவைக்கும் சம்பவம்.

Husband and wife suicide after 4 months of marriage

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் குமிடிபூண்டி பகுதியை சேர்ந்தவர் தேவி. இவரது மகள் லோகேஸ்வரி. லோகேஸ்வரிக்கும், தேவியின் உறவினர் அன்பு என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் உறவினர்கள் திருமணம் செய்துவைத்துள்னனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களிலையே தன்னை கணவர் அடித்து கொடுமை படுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கணவன் வீட்டில் இருந்து கோவித்துக்கொண்டு லோகேஸ்வரி தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த 15 ஆம் தேதி லோகேஸ்வரி வீட்டிற்கு வந்து அன்பு அவரிடம் மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லோகேஸ்வரி தனது தாய் வீட்டிலையே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மகளை கொடுமை படுத்தியதாலும், அவரிடம் வரதட்சணை கேட்டு மிரட்டியதாலும்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தேவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் தடா பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த லோகேஸ்வரியின் கணவர் அன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணைக்கு பயந்தே அன்பு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

திருமணம் முடிந்து 4 மாதங்களில் அடுத்தடுத்து மனைவி மற்றும் கணவன் தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story