×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேருந்து சக்கரத்தில் சிக்கி கணவன் மனைவி பரிதாப பலி... 100 மீட்டர் தூரம் உடல் இழுத்துச் செல்லப்பட்ட பரிதாபம்...!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி கணவன் மனைவி பரிதாப பலி... 100 மீட்டர் தூரம் உடல் இழுத்துச் செல்லப்பட்ட பரிதாபம்...!!

Advertisement

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி கணவனும், மனைவியும் உயிரிழந்தனர். 100 மீட்டர் தூரம் அவர்களது உடல்கள் இழுத்துச்செல்லப்பட்டன. 

கோவை கள்ளிப்பாளையத்தில் வசிப்பவர் ராஜேந்திரன் (45). இவருடைய மனைவி தேவி(33). இவர்களுக்கு தர்னிஷ், வாசுலேகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும், பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் இருவரும் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். சைக்கிளை ராஜேந்திரன் ஓட்டினார். ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து திடீரென அவர்கள் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன், தேவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 

இதை கவனிக்காமல் பேருந்தின் ஓட்டுனர் தொடர்ந்து பேருந்தை ஓட்டி சென்றார். இதனால் அவர்கள் பேருந்து சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். மேலும் அவர்களது உடல்கள் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டன. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டனர். உடனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.  

இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய உசிலம்பட்டியை சேர்ந்த ஓட்டுநர் குபேந்திரன்(38), அரசு பேருந்துடன் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Coimbatore #husband and wife #government bus #accident
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story