தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே.! ஒரு இடியாப்பத்தால் வாழ்க்கையே சிக்கலாகிருச்சே.! அதிரடியாக 20 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!!

அடக்கடவுளே.! ஒரு இடியாப்பத்தால் வாழ்க்கையே சிக்கலாகிருச்சே.! அதிரடியாக 20 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!!

husband-and-wife-court-for-idiyappa-issue Advertisement

சென்னையை சேர்ந்தவர் வேணு குமார். இவர் வனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். வேணுகுமார் மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.  இந்நிலையில் அவருக்கும் வனிதாவிற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இவ்வாறு ஒருநாள் வேணுகுமார் இடியாப்பம் செய்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு வனிதா வீட்டில் இடியாப்ப குழல் இல்லை, செய்ய முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேணு குமார் அவரை சரமரியாக  தாக்கியுள்ளார். இந்நிலையில் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக வனிதா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தான் திருமணம் முடிந்த காலத்திலிருந்து உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல துன்பங்களை அனுபவித்து வந்ததாக வனிதா கூறியுள்ளார். மேலும் தான் 2018ல் அவரது பிறந்த நாளுக்காக ஆசையாக வாங்கி கொடுத்த காபி கப்பை அவர் சிகரெட் சாம்பல் கொட்ட பயன்படுத்தி எனது உணர்வுகளை புண்படுத்தினார் எனவும் வனிதா நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லகூடாது என கணவரின் குடும்பத்தினர் கூறியதால் நான் வீட்டு செலவுக்காக தனது தந்தையிடம் பணம் வாங்கி வந்தேன் என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

idiyappam

ஆனால் வேணுகுமார்,அவர் சொல்வது பொய். அவர் வீட்டில் ஒழுங்காக சமைப்பதே கிடையாது. நான் வெளியே ஹோட்டலில்தான் சாப்பிடுவேன். நான் ஏதாவது கேட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார் என்று அவரும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் என்னிடம் இருந்த சொத்துக்களை அபகரிப்பதற்காகதான் வனிதா இவ்வாறு கூறுகிறார் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் வேணுகுமாரிடம் எதுவுமே இல்லாத நிலையில் எப்படி சொத்துக்களை அபகரிக்க முடியும் என நீதிபதி வாதிட்ட நிலையில், தனது பொருளாதார நிலையை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை உணர்வுரீதியாக துன்புறுத்தியததற்காக வனிதாவுக்கு  ரூபாய் 20 லட்சம் இழப்பீடாக வேணுகுமார் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#idiyappam #court #20 Lakhs
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story