தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரு நாளைக்கு 5 லட்சம் லாபம் சம்பாதிப்பதாக கூறி 5 கோடி அபேஸ்..! சிக்கி தவிக்கும் பலர்.!

ஒரு நாளைக்கு 5 லட்சம் லாபம் சம்பாதிப்பதாக கூறி 5 கோடி அபேஸ்..! சிக்கி தவிக்கும் பலர்.!

husband and wife cheated lot of persons Advertisement

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சிவசங்கரி என்பவரது வீட்டின் எதிர் வீட்டில் காமாட்சி, கார்த்திகேயன் தம்பதிகள் அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு காமாட்சி தனது குடும்பத்தாருடன் சேர்ந்து பல்வேறு பங்கு சந்தைகளில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் லாபம் சம்பாதிப்பதாக சிவசங்கரியிடம் கூறியுள்ளார்.

இவ்வாறு பங்குசந்தையில் பணம் முதலீடு செய்ததால் நிறைய லாபம்  என்று கூறி சிவசங்கரியிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்க்கு சிவசங்கரி மற்றும் அவரது கணவர் மறுப்புத்தெரிவித்துள்ளனர். ஆனால் காமாட்சி மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன் அடிக்கடி சிவசங்கரி வீட்டிற்கு வந்து அவர்களிடம் ஆசையை தூண்டி அவர்களை நம்ப வைத்துள்ளனர்.

இதனையடுத்து சிவசங்கரி கணவரின் மொத்த சேமிப்பு பணம் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரத்தை மூன்று தவணைகளாக சிவசங்கரி வங்கி கணக்கில் இருந்து காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம்  பங்கு சந்தையில் முதலீடு செய்ததை தொடர்ந்து ஒரு மாதம் மட்டும் ஊாக்க தொகை என கூறி ரூபாய் 50 ஆயிரம் மட்டும் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் பனம் ஏதுவும் கொடுக்காமல், இன்கம் டாக்ஸ் பிரச்னை என கூறி காலம்தாழ்த்தி வந்துள்ளனர். இந்தநிலையில், காமட்சி, விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மீது சிவசங்கரி குடும்பத்திற்கு சந்தேகம் வந்ததால் இவர்கள் செலுத்திய முன் பணம் ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

அந்த சமயத்தில் காமாட்சியின் வீடு நிரந்தரமாக பூட்டு போடப்பட்டிருந்தது. அப்போது அதிகப்படியானோர் இவர்களை தேடி வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது காமாட்சி மற்றும் மேற்கண்ட நபர்கள் பங்கு சந்தையில் டிரேடிங் செய்வதாகக் கூறி சிவசங்கரியை போல் பலரையும் ஏமாற்றி பல கோடி கணக்கில் பணமேசாடி செய்துவிட்டு தலைமறைவானது சிவசங்கரிக்கு தெரியவந்துது.

பங்கு சந்தையில் டிரேடிங் செய்வதாக கூறி  பலரை ஏமாற்றி சுமார் 5 கோடி மோசடி செய்துள்ள காமாட்சி, கார்த்திகேயன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பலர் மீது பல்வெறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cheating #husband and wife #kamatchi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story