பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு..!
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு..!
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிஉள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கவிதா வெளியிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளதால், பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விடுமுறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுடன், மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடிமகன்களுக்கு ஷாக் நியூஷ்! நாளை ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் விடுமுறை! வெளியான அதிரடி அறிவிப்பு!!!
மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பின்னர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆடி கிருத்திகை நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குடிமகன்களுக்கு ஷாக் நியூஷ்! நாளை ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் விடுமுறை! வெளியான அதிரடி அறிவிப்பு!!!