×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்.! தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.!

high way toll fee increased

Advertisement

தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றது. இந்த சுங்கச் சாவடிகளில், ஆண்டுதோறும், 5 முதல், 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் செயல்படும் 48 சுங்கச்சாவடிகளில் புதுார் பாண்டியபுரம்(விருதுநகர்), எலியார்பதி(மதுரை), ராசம்பாளையம்(நாமக்கல்), நத்தக்கரை(சேலம்), வைகுந்தம்(சேலம்), மேட்டுப்பட்டி(சேலம்), ஓமலுார் -(சேலம்), வீரசோழபுரம்(சேலம்), சமயபுரம்(திருச்சி), பொன்னம்பலபட்டி(திருச்சி), திருப்பராய்த்துறை( திருச்சி) வாழவந்தான்கோட்டை (தஞ்சாவூர்), கொடை ரோடு (திண்டுக்கல்) வேலஞ்செட்டியூர்(கரூர்), மணவாசி(கரூர்), பாளையம்(தர்மபுரி), விஜயமங்கலம்(குமாரபாளையம்), திருமாந்துரை(விழுப்புரம்), மொரட்டாண்டி(விழுப்புரம்), விக்கிரவாண்டி(விழுப்புரம்), செங்குறிச்சி(உளுந்துார்பேட்டை) ஆகிய,21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு வழக்கமான நடை முறை தான் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு வாகன ஓட்டிகள் கடும்  அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் கட்சியினரும் கூறுகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#haigh way #toll fee
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story