×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு; திமுகவினர் ஆறுதல்

கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு; திமுகவினர் ஆறுதல்

Advertisement

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கலைஞரின் உடலை அறிஞர் அண்ணா நினைவகம் அருகே அடக்கம் செய்யப்பட அனுமதி கோரிய மனுவை நிராகரித்த ஆளும் கட்சி சென்னையில் உள்ள சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என அறிவித்துள்ளது.

இதனை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக நேற்று இரவு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியிடப்படும் என நீதிபதிகள் கூறிவிட்டனர். 

அதன்படி தற்பொழுது நடைபெற்ற வழக்கு விசாரணையில் திமுக சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் பலதரப்பட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

வாதத்தில் சில சிறப்பு அம்சங்கள்:

தமிழக அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தனது வாதத்தில் கூறியதாவது: "அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கை திமுக தொடர்ந்துள்ளது. மெரினாவில் நினைவிடங்கள் கட்டக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட செயல்."

திராவிடக் கொள்கை கொண்ட தலைவர்கள் மெரினாவில் தான் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திமுக தரப்பு வாதிட்டது. ஆனால் தந்தை பெரியார் திராவிட இயக்கங்களின் மிகப்பெரிய தலைவர். அவர் மெரினாவில் அடக்கம் செய்யப்படவில்லை.

இறுதிச் சடங்கு என்பது உயர் பதவியில் உள்ளோருக்கு வேறு வகையான நடைமுறையிலும் உயர்பதவியில் இல்லாதவர்களுக்கு வேறு வகையான நடைமுறைகளிலும்தான் நடைபெறும்.

காங் தலைவர்கள் சமாதிகள் உள்ள அந்த பகுதியில் அடக்கம் செய்வது கண்ணியமற்றது என்பது காந்தி, காமராஜர், பக்தவசலம் போன்றோரை அவமதிப்பதற்கு சமம் என வைத்தியநாதன் தனது கருத்தை பதிவு செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பின்வருமாறு தீர்ப்பளித்தனர்: 

திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவகத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

இறந்தும் வென்றார் தலைவர் என திமுகவினர் கோஷமிட்டபடி உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#high court judgement #karunanithi funeral #karunanithi dead #marina beach #gandhi mandabam #funeral at Marina #TN politics
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story