×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

7 வயது சிறுமி மாயமான வழக்கில்... சுற்றுவட்ட காட்டுப்பாதைகளை தெரிந்த ஆடு மேய்பவரிடம் 2 நாளாக விசாரணை..! சிபிசிஐடி வசம் சிக்கிய அரவிந்த்..!!!

விழுப்புரம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், ஆடு மேய்க்கும் அரவிந்த்திடம் காட்டுப்பகுதியில் வைத்து சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி காணாமல் போய் 22 நாட்களைக் கடந்துள்ள நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆடு மேய்க்கும் அரவிந்த் என்பவரைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று இரண்டாவது நாளாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாடிய மறுநாள் மாயமான சிறுமி

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்று இரவு வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் காலையில் திடீரென காணாமல் போனார். இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையும் படிங்க: 7 வயது சிறுமி மாயமான வழக்கில்... அடுத்த 3 நாளில் சிபிசிஐடி உடைக்கப்போகும் மர்மம்! ரகசிய விசாரணையில் சிக்கிய முக்கிய ஆதாரம்... செஞ்சி சிறுமி வழக்கில் அதிரடி காட்டும் சிபிசிஐடி..!!!

பெற்றோரிடம் விசாரணை; குற்றவாளிகளின் புகைப்படங்கள் மூலம் தேடுதல்

வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பெற்றோரிடம் அரசுப் பள்ளியில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களுக்குச் சென்று சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களைக் காட்டி தகவல்களைச் சேகரித்தனர்.

இதற்கிடையே, அடிதடி வழக்கில் சிறையில் இருந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையைச் சிறையிலிருந்து அழைத்து வந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது நண்பரான அரவிந்த் குறித்த தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

காட்டுப்பாதைகளை அறிந்த அரவிந்த்திடம் 2-வது நாளாக விசாரணை

அரவிந்த் அப்பகுதியில் நீண்டகாலமாக ஆடு மேய்த்து வருவதால், சுற்றுவட்டாரக் காட்டுப்பாதைகள் அவருக்கு நன்கு தெரியும் எனக் கூறப்படுகிறது. இதனால், சிறுமி மாயமானது தொடர்பாக அவருக்கு ஏதேனும் தகவல் தெரிந்திருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து, அரவிந்த்தைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் நேற்று முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று இரண்டாவது நாளாகவும் அவரிடம் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: ஐயோ..! கடவுளே...! இரவில் பெற்றோர் நடுவே தூங்கிய 7 வயது சிறுமி..! காலையில் எழுந்தபோது படுக்கையில் காத்திருந்த பேரதிர்ச்சி.... பகீர் சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஹேமலதா #செஞ்சி சிறுமி மாயம் #CBCID Investigation #அரவிந்த் விசாரணை #விழுப்புரம் மாவட்டம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story