×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"ஓட்டு போட வா வான்னு சொன்னா எப்புடி வர்றது" நள்ளிரவில் புலம்பி தீர்த்த சென்னை வாழ் தமிழர்கள்

Heavy traffic in Chennai for election

Advertisement

தமிழகம் முழுவதும் இன்று ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இன்று அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

மேலும் இதனைத் தொடர்ந்து புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை வருவதால் பெரும்பாலான நிறுவனங்கள் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் பணிபரியும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். 

ஒவ்வொரு விழா காலத்திலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசு இந்தமுறை அதனை தொடர்ந்து செய்யவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்த தேர்தல் ஆணையமும் இதற்கான வழிமுறைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. 

இதன் விளைவாக நேற்று இரவு சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களான சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகியவை முற்றிலும் ஸ்தம்பித்தன. குறிப்பாக தாம்பரத்தில் ஏராளமானவர்கள் கூடியதால் ரயில் நிலையம் மற்றும் ரயில் பெட்டிகள் நிரம்பி வழிந்தன. தனியார் பேருந்துகள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியதால் வேறு வழியின்றி ரயில் பயணத்தையே பெரும்பாலானோர் நாடினர்.

 

இதோடு மட்டுமல்லாமல் முக்கிய பேருந்து வழித்தடமான கோயம்பேடு - பெருங்களத்தூர் வரை கடினமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Election 2019 #Chennai traffic #Tambaram #Cmbt
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story