கஜா புயல்: 15-ஆம் தேதி மட்டுமல்ல 16-ஆம் தேதியும் மிக கனமழை பெய்யுமாம்! விவசாயிகள் மகிழ்ச்சி
Heavy rain not only 15 also in 16

கஜா புயல் தென்மேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதே திசையில் சென்றால் 15-ம் தேதி காலை முதல் நண்பகலுக்குள் கடலூர், வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயலால் முதலில் வட உள்மாவட்டங்கள் மட்டும் மழையைப் பெறும் எனக் கூறப்பட்டது. ஆனால், புயலின் திசையைப் பார்க்கும்போது, தென்தமிழகத்தின் உள்மாவட்டங்கள் ஒருசிலவற்றிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வங்க கடலில் இருந்து மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் நகரும் கஜா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நவம்பர் 15-ல் கடக்க கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் நவம்பர் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் வட தமிழகம், தென் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 13) இரவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் 16ஆம் தேதியும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இப்படி நடந்தால் நிச்சயம் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைவர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் வேண்டிக்கொள்ளுங்கள்.