தமிழகத்தில் மீண்டும் பலத்த மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்! எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
heavy rain in tamilnadu

தமிழக கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையடுத்துள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் பரவி உள்ளது.
இதனையடுத்து தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் வட மாவட்டங்களில் வெயில் பட்டையை கிளப்புகிறது.
இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது டிசம்பர் 3 ஆம் தேதி தென் மேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை வரை பரவும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக டிசம்பர் 4, 5-ஆம் தேதிகளுக்கு மட்டும் வடதமிழகத்துக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து வானிலை ஆய்வாளர்கள் கணித்து வருகிறார்கள். அதன் பிறகே தொடர்ந்து மழை எச்சரிக்கை விடப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே வட மாவட்டங்கள், போதிய மழை இல்லாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவருகின்றனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வடமாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.