வானிலை: 12 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!
அடுத்த 3 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளிலும், தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றைய வானிலையை பொறுத்தவரையில் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்றைய வானிலை:
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்.!
அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை:
அதன்படி கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை:
சென்னை வானிலையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பொளக்கப்போகும் கனமழை.. 25 மாவட்டங்களுக்கு அலர்ட்.. லிஸ்ட் இதோ.!