×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

18 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

18 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " 18ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழையும், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19ஆம் தேதியை பொருத்தவரையில், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன்  காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 - 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 - 26 டிகிரி செல்ஸியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 18 ஆம் தேதியான இன்று லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிகடல் பகுதிகளில் சூறாவளிகாற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#heavy rainfall #Rain alert #tamilnadu #chennai #18 districts
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story