நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த தமிழக வீரருக்காக, பிரபல நடிகர் என்ன செய்துள்ளார் தெரியுமா?
harish kalyan give money to tamilnadu jawan family
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல் துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, 350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளை கொண்ட லாரியை மோதி வெடிக்கச் செய்தது.
இந்த தாக்குதலில் இந்திய துணை ராணுவத்தினர் 44 பேர் பலியானர்.இதனால் இந்தியா முழுவதும் பெரும் தூரத்தில் மூழ்கியது.
மேலும் இந்த தாக்குதல்களில் மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், மற்றும் மற்றொருவர் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் என்ற இரு தமிழர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது தூத்துக்குடியை சேர்ந்த வீரர் சுப்ரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.மேலும் அவரை நல்லடக்கம்செய்த இடத்திற்கு சென்று மரியாதையும் செலுத்தியுள்ளார்.
மேலும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அவரது குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் பண உதவியும் செய்துள்ளார்.