×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்னும் இருநாட்களிலேயே தொழிலதிபருடன் திடீர் திருமணமா? நடிகை ஹன்சிகா அதிரடி பதில்!

Hansika answered for marriage rumour

Advertisement

தமிழ் சினிமாவில் தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி.அதனை தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, ஜெயம் ரவி,  விஷால், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார். நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி தற்போது தமிழில் மஹா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் அவ்வபோது ஹீரோயின்களுக்கு திருமணம் என்ற வதந்திகள் பரவுவது வழக்கம். அவ்வாறு சமீபத்தில், ஹன்சிகாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, இன்னும் இரண்டு நாட்களில் ஹன்சிகாவிற்கு தொழிலதிபருடன் திருமணம் நடைபெறவுள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதனைக்கண்ட ஹன்சிகா அதிர்ச்சியடைந்து, அந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும்வகையில், அடக்கொடுமையே யார் இவர் என பதிவிட்டுள்ளார். இதற்கு ஹன்சிகாவின் நண்பர் ஒருவர், என்னிடம் கூட இதை சொல்லவில்லையே என கேட்டதற்கு,  ஹன்சிகா கிண்டலாக எனக்கே இப்போதுதானே தெரியும் என தெரிவித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hansika #marriage #rumour
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story