×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த மனசு தான் சார் கடவுள்..! தனது கஷ்டத்திலும் சுட்டெரிக்கும் வெயிலில் இப்படி ஒரு உதவி.! கும்பிட்டு கண்கலங்கும் ஆதரவற்றோர்.!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தீத்தானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தீத்தானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவர். கடந்த மூன்று நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில், இந்த முழு ஊரடங்கு காரணமாக, சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவரது வீட்டில் உணவு ஏற்பாடு செய்து, அதனை பார்சல் செய்து நேரில் சென்று கொடுத்து, ஏழைகளின் பசியை போக்கி வருகிறார்.

அவரது வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து உணவு தயார் செய்து, புதுக்கோட்டை நகரில் பசியோடும், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சாலையோரங்களில் வாடிய முகத்துடன் இருந்த மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள் என பசியில் வாடிய அனைவருக்கும் உணவு வழங்கியுள்ளார். அப்போது ஒருவர் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை தண்ணியாவது கொடுங்கள் சாமி...  இரண்டு நாட்களாக சாப்பாடு இல்லாமல் மயக்கமாக உள்ளது... என கண்கலங்கியபடி கூறியுள்ளார். இதனை கேட்ட ரெங்கராஜ் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியுள்ளது. ரெங்கராஜ் என்பவரும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரெங்கராஜிடம் கேட்டபோது, நான் பிறந்த மாவட்டத்தில் பலர் உண்ண உணவு இல்லாமல் தவித்து வருவதை பார்த்து மிகவும் மன வேதனை அடைந்தேன். இதனால் என்னால் இயன்ற அளவு இந்த ஊரடங்கு காலத்தில் இதுபோன்று உணவு இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு என்னால் முடிந்த வரை உதவி செய்வேன். ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் நகர்புறங்களில் ஆதரவற்றோர் பலர் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கூட தவித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளியான ரெங்கராஜ் செய்யும் உதவி புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் தனது கஷ்டத்தை கண்டு கொள்ளாமல், உணவின்றி தவித்து வரும் அப்பாவி மக்களுக்கு கருணை உள்ளம் கொண்ட ஒரு தாய் போல் அவர்களது பசியை போக்கி வருகிறார். இவர் பசியில் வாடியவர்களுக்கு உணவளித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரெங்கராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Poor people #handicap #help
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story