"தலை முடி உதிர்வதால் சோகம்... " கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை.!!
தலை முடி உதிர்வதால் சோகம்... கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை.!!
கன்னியாகுமரி மாவட்டம் ராணியல், காரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஞானசெல்வன். இவர் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். அவரின் மனைவி ரூபி ஆன்றணி. 2 மகள்களுடன் அங்கு வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை ரூபி தன்னுடைய இளைய மகளுடன் தேவாலயத்திற்கு சென்றிருந்தார். மூத்த மகள் அஸ்வினி(19) மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது பெட்ரோலை மேலே ஊற்றி தீவைத்துக்கொண்டார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த தாய் ரூபி, மகளை இழந்த வேதனையில் கதறி அழுதார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: "ம்ம்மா... எரியுதுமா விட்டுடு..." எரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.!! தாய் தற்கொலை.!!
போலீசார் விசாரணையில் அஸ்வினி நாகர்கோவிலிலுள்ள தனியார் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சில காலமாக அவர் முடி உதிர்வு பிரச்சனை காரணமாக நாகர்கோவில் அழகு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதனுடன் தொடர்ந்து பக்க விளைவு ஏற்பட்டதன் காரணமாக தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனை வந்துள்ளது. இதற்காக கடந்த வாரம் மருத்துவ சிகிச்சையும் பெற்றிருந்தார்.
இந்த பக்க விளைவு காரணமாக அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் இதனால் பைக்கிற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "தாயின் உயிரைப் பறித்த மது வெறி... " குடிக்க பணம் தர மறுத்த தாய் எரித்து கொலை.!! மகன் வெறி செயல்.!!