தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெரும் சோகம்..மனைவியின் இறப்பை ஏற்க்க முடியாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை.!

பெரும் சோகம்..மனைவியின் இறப்பை ஏற்க்க முடியாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை.!

Great tragedy..Unable to accept the death of his wife, the husband hanged himself.! Advertisement


கடலுார் மாவட்டம் புதுப்பாளையம் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் அந்தோணி சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடலுார் மாவட்ட கருவூல கணக்குத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இவர் காலை அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லாமல் இருந்ததை கவனித்த விடுதி உரிமையாளர் அவரது அறையின் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் எந்த பதிலும் இல்லாததால் சந்தேகம் அடைந்த விடுதி உரிமையாளர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Sucide

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்தோணி சகாயராஜ் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் சடலமாக தொங்கியுள்ளார். இதனைதொடர்ந்து அந்தோணி சகாயராஜின் சடலத்தை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்தோணி சகாயராஜின் மனைவி நார்டியா கரோலின் லுாசி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவால் இறந்துள்ளார். இதனால் அந்தோணி சகாயராஜ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவரின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மனைவியின் இறப்பை ஏற்க முடியாத கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sucide #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story