×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மின்வாரிய அலுவலக லஞ்ச வேட்டையில் கையும் களவுமாக சிக்கிய பெண் இன்ஜினியர் பத்மாவதி! தாம்பரத்தில் அதிரடி சஸ்பெண்ட்..!!!

கௌரிவாக்கம் மின்வாரிய அலுவலக உதவி பொறியாளர் பத்மாவதி, ஆன்லைன் மூலம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த உதவி பொறியாளர் பத்மாவதி, பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் அலுவலகத்திலேயே பணம் வாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் லஞ்சம்?

கௌரிவாக்கம் மின்பிரிவில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த பத்மாவதி, புதிய மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக பொதுமக்களிடம் GPay உள்ளிட்ட டிஜிட்டல் வழிகளில் பணம் பெற்று வந்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. குறிப்பாக, நேரடியாக ரொக்கம் கொடுக்க தேவையில்லை என்றும், குறிப்பிட்ட எண்ணுக்கு பணத்தை அனுப்பினாலே போதும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துறை விசாரணைக்கு பின் நடவடிக்கை

புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பத்மாவதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: பார்க்கவே அசிங்கமா இருக்கு....மாணவியுடன் மதபோதகர் செய்த அருவருப்பான செயல்! சிக்கிய சிசிடிவி காட்சியால் பெற்றோர்கள் போராட்டத்தில்...!!!

புதிய வீடியோ வைரல்

சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பிறகு, பத்மாவதி தனது அலுவலகத்தில் மற்றொரு நுகர்வோரிடம் இருந்து மிகவும் சாதாரணமாக லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சிகள் பொதுமக்கள் மட்டுமல்லாமல் மின்வாரிய உயர் அதிகாரிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வீடியோ தொடர்பாகவும் அதிகாரிகள் கூடுதல் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: காதல் பாட்டுடன் ஓடும் பேருந்தில் டிரைவர் போட்ட கடலை! அருகே அமர்ந்து குஜாலான இளம்பெண்! பார்க்க சகிக்காத லீலைகள்... உயிரை கையில் பிடித்திருந்த பயணிகள்! அதிர்ச்சி வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கௌரிவாக்கம் #EB Bribery #பத்மாவதி #Tambaram News #Gpay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story