அச்சோ கொடுமை... மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்... அரசு பேருந்து நடத்துனர் கைது.!
அச்சோ கொடுமை... மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்... அரசு பேருந்து நடத்துனர் கைது.!
கிருஷ்ணகிரி அருகே மனநலம் பாதித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசு பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரியகாமாட்சிபட்டியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தவர் பொன்னுரங்கன்(47). பணியிடை நீக்க காலத்தில் உள்ள இவர் மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள மனநலன் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.