சிம் ஆக்டிவ்ல இல்லைனா அவ்ளோதான்.. முடங்கும் வாட்ஸ்அப் & டெலிகிராம் கணக்குகள்.!
டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
மொபைல் போனில் செயல்படும் இணையவழி மெசேஜிங் செயலிகளுக்கான பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.
இணையம் வழியாக செயல்படும் மெசேஜிங் மற்றும் தொடர்பு செயலிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய ஒழுங்குமுறையை அறிவித்துள்ளது. அதன்படி வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் குறைந்தது 90 நாட்களுக்கு ஒரு முறை சிம் கார்டு செயலில் உள்ளதா? என கட்டாயமாக சரிபார்க்கப்படும். சரிபார்ப்பில் தோல்வியடைந்தால், குறிப்பிட்ட மெசேஜிங் செயலியின் கணக்கு தானாகவே முடக்கப்படும்.
சிம் கார்டு சோதனை:
அதேபோல பாதுகாப்பு காரணங்களால், வாட்ஸ் அப் வெப் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானாக லாக்அவுட் ஆகும். தொடர்ந்து பயன்படுத்த நினைப்பவர்கள் மீண்டும் OTP முறையில் உள்நுழைய வேண்டும். செயலிழந்த அல்லது போலியான சிம் கார்டுகளை பயன்படுத்தி நடைபெறும் சைபர் மோசடிகளை கட்டுப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம். பிடிபடாத குற்றவாளிகள் பெரும்பாலும் Inactive SIM நம்பர்களை பயன்படுத்துவதன் காரணமாக இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
இதையும் படிங்க: ஆதார் அட்டையில் இனி மொபைல் நம்பரை வீட்டிலிருந்தே மாற்ற முடியும்! எப்படி தெரியுமா..??
டிஜிட்டல் பாதுகாப்பு:
இந்த புதிய நடைமுறை வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட அனைத்து எண்ட்-டூ-எண்ட் தொடர்பு செயலிகளுக்கும் சேர்த்து பொருந்தும் கூறப்படுகிறது. டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த புதிய நடைமுறை மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.