அச்சச்சோ என்னாச்சு.. பச்சிளம் பிஞ்சுகளின் உயிரை காத்த அரசுப்பேருந்து ஓட்டுநர்.. குவியும் பாராட்டுக்கள்.. திருப்பூரில் திக்., திக்., நிமிடங்கள்.!
Tiruppur Govt Bus Accident News Today: அரசுப்பேருந்து ஓட்டுநர் பெரும் விபத்தை தவிர்க்க காரணமாக இருந்தார்.
திருப்பூரில் விபத்தில் இருந்து தப்பிக்க அரசுப்பேருந்து ஓட்டுநர் மேற்கொண்ட துரித காரியம் பள்ளி குழந்தைகளின் உயிரை காப்பாற்றியது. இதன் பதறவைக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
வீடியோ வைரல்:
Tiruppur Palladam Bus Accident Today Video: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் சாலை விதிகளை கடைபிடிக்காத காரணத்தால் பல்வேறு விபத்துகள் நேர்ந்து வருகின்றன. இவற்றில் ஒருசிலரின் தவறால் அவ்வழியாக செல்லும் பிற வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் ஆபத்தும் அதிகம் நடக்கின்றன. இதனிடையே, திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சிகிரெட் பிடிக்க கூடாதுன்னு சொல்ற? சாவு.. இளம்பெண்ணுக்கு ரயிலில் நேர்ந்த சம்பவம்.. பகீர் காட்சிகள்.!
பள்ளிப்பேருந்து:
அதாவது, திருப்பூர் மாவட்டம், பல்லடம், காளைவேலம்பட்டி பிரிவு அருகே தனியார் பள்ளி வேன் சாலையை கடந்து சென்றது. இந்த இடத்தில் திரும்பி செல்வது ஆபத்தானதாக தெரியவருகிறது. தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் எதிர்திசையில் பேருந்தை இயக்கி வந்து, பின் சாலையை கடந்து இருக்கிறார்.
நொடியில் நடந்த நிகழ்வு:
அப்போது, அவ்வழியாக பயணித்த அரசுப்பேருந்து ஓட்டுநர், இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் பள்ளி பேருந்தும் குறுக்கே வந்த நிலையில், அரசுப்பேருந்து ஓட்டுநர் பள்ளிப்பேருந்து மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பி இருக்கிறார். இந்த சம்பவத்தில் அரசுப்பேருந்து அங்கிருந்த பேக்கரிக்கு முன் சென்று நின்றது.
விமர்சனம்:
பேக்கரிக்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த நிழற்குடையின் மோதி நின்றது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. ஓட்டுநர் சுதாரித்ததால் பள்ளி பேருந்தும், அதில் இருந்த குழந்தைகளும் காயமின்றி உயிர்தப்பினர். ஆனால், ஒருசில நபர்கள் வீடியோவை பதிவிட்டு அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாக கூறி விமர்சித்து வருகின்றனர். வீடியோவில் உள்ள உண்மை காட்சிகளின்படி, அரசுப்பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:
கோடை விடுமுறைக்குப்பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் முறையாக சாலை விதிகளை கடைபிடித்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில், சரியான திசையில் பயணித்து திரும்பி வர டீசல் செலவாகும் என்பதால், இதுபோன்ற ஆபத்தான முறைகளை ஊக்குவிக்கும் ஓட்டுனர்களை, அதற்கு வலியுறுத்தும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பேக்கரி வாசலில் மோதி நின்ற பேருந்து:
முழு வீடியோ:
இதையும் படிங்க: காதல் திருமண விவகாரத்தில் சரமாரி தாக்குதல் பயங்கர சண்டை.. அலறிய பெண்.. பதறவைக்கும் வீடியோ & தாக்குதல் காட்சிகள்.!