கணிசமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
கணிசமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.
உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் சில மாதங்களில் தங்கத்தின் விலையானது ரூ.1,00,000 ஐ கடந்து விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் தங்கம் விலை :
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை முன்னதாக ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், கடந்த 1 வருடத்திற்குள் தொடர்ந்து விலை உயர்ந்து, தற்போது ரூ.80 ஆயிரம் நோக்கி பயணம் செய்கிறது.
இதையும் படிங்க: #Breaking: நகை பிரியர்களுக்கு ஷாக்.. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,760 உயர்ந்தது.!!
இன்றைய தங்கத்தின் விலை :
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, சவரன் ஆபரண தங்கம் ரூ.71,800 க்கு விற்கப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் விலை ரூ.45 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8,975 க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை :
அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.1,000 உயர்ந்து, வெள்ளி விலை ரூ.1,12,000 க்கு விற்பனையாகிறது. சமீபகாலமாகவே வெள்ளி மற்றும் தங்கத்தின் விலையானது ஏற்றத்திலே இருப்பதால் எதிர்காலத்தில் ரூ.2,00,000 வரை செல்வதற்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்றைய தங்கம் விலை என்ன?.. விவரம் உள்ளே.!!