×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்.! தங்கம் விலை கிடுகிடுவென குறைவு..! இன்றைய விலை நிலவரம்.!

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா வைரசால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்க

Advertisement

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா வைரசால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது. இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து  கொரோனா சமயத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது.

இதனையடுத்து நாடுமுழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்து வந்தநிலையில் தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கமாக இருந்துவந்தது. இதனையடுத்து கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்து வந்தநிலையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியது.

இந்தநிலையில் சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,405 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,240 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38112 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை 1 கிலோக்கு 2,950 குறைந்து,  ஒரு கிராம் ரூ. 72.80 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.72,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gold rate #reduced
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story