மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை? இன்றைய விலை நிலவரம்!
மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை? இன்றைய விலை நிலவரம்!
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மீண்டும் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா.? ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தெரியுமா?
இந்த விலை உயர்வால்திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக அதிக அளவில் தங்க நகைகள் வாங்க வேண்டிய குடும்பங்கள், பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் விலை எந்த திசையில் செல்லும் என்பது சர்வதேச சந்தை மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு குட் நியூஸ்… இன்று முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை!