×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு இப்படியொரு அவலமா? மரத்தில் தொங்கும் பைகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

girls stay away from vcity when an mensturation period

Advertisement

மதுரையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கூவலப்புரம் கிராமம். இந்த கிராமத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் அவர்கள் வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் அதற்கு மாற்றாக தனி இடத்தில் தங்க வைக்கப்படுவார்கள். இதற்காக முட்டுதுறை என்றழைக்கும் பகுதியில் இருஅறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 அந்த அறைகளும் ஒன்று 5அடி அகலமும், 5 அடிநீளமும் கொண்டது. மற்றொன்று 15 அடி நீளமும்,10 அடி அகலமும் கொண்டது. மேலும் இந்த அறைக்கு வெளியே மரத்தில் ஏராளமான துணிப்பைகள்,  சாக்குகள் தொங்க விடப்பட்டுள்ளது. இந்த பைக்குள்  மாதவிடாய் ஏற்பட்டு தனியாக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு தேவையான தட்டு,  டம்ளர், சாப்பாடு மற்றும் துணிகள் போன்ற பொருட்கள் இருக்கும். இவற்றை அவர்களது மாதவிடாய் காலங்களில் மட்டுமே பெண்கள் பயன்படுத்துவார்கள்.

மேலும் அந்த காலங்களில் பெண்களை யாரேனும் தொட்டால் அவர்கள் குளிக்காமல் வீட்டிற்கு செல்லக்கூடாது. இந்நிலையில் இந்த காலத்திலும்இப்படியொரு அவலமான என பலர் கேள்வி எழுப்பிய நிலையில், இது தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டுகளாக பின்பற்றப்படுவது, இவ்வாறு பல தலைமுறைகளாக நாங்கள் பின்பற்றி வருவதால்,  எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்ல,  தவறு இருப்பதாகவும் கருதவில்லை என அவ்வூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#menstruation #koovlapuram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story