ஆண்களை மிஞ்சி பெண்கள் செய்த காரியம்! நடுங்க வைக்கும் வீடியோ காட்சி!
Girls dancing at bus foot board video goes viral

ஆண்களுக்கு நிகராக பெண்களும் அணைத்து துறைகளிலும் முன்னேறிவருகின்றனர். ஆண்கள் செய்யும் அணைத்து வேலைகளையும் எங்களாலும் செய்யமுடியும் என கூறும் சாதனை பெண்களும் இந்த மண்ணில்தான் உள்ளனர்.
பிஞ்சு குழந்தையை முதுகில் சுமந்துகொண்டு உணவு டெலிவரி செய்யும் பெண், ஆட்டோ, லாரி, பள்ளி வாகனம் ஓட்டும் பெண்கள் என பலர் பெண்ணினத்தை பெருமைப்பட செய்யும் அதே நேரத்தில் பெண்ணுரிமை என்ற பெயரில் சில அடாவடி செயல்களை செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஓடும் பேருந்தின் படியில் நின்று பயணம் செய்வது என்பது மிகவும் ஆபத்தான, தவறான செயல். ஆனால், இந்த காட்சியில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் படியில் நின்றுகொண்டு சில பெண்கள் ஆட்டம் போட்டுக்கொண்டே அதிவேக பேருந்தில் பயணம் செய்யும் காட்சி பார்ப்போரை பதறவைக்கிறது.