×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூனை காமிக்கிறேன் னு கூட்டிப்போய்... 5 வயது சிறுமிக்கு பாலியல்., கொலை முயற்சி.. கோவையில் பேரதிர்ச்சி சம்பவம்..!

பூனை காமிக்கிறேன் னு கூட்டிப்போய்... 5 வயது சிறுமிக்கு பாலியல்., கொலை முயற்சி.. கோவையில் பேரதிர்ச்சி சம்பவம்..!

Advertisement

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, கொலை செய்ய முயன்ற  காமுகன், அக்கம்பக்கத்தினரால் தர்ம அடி கொடுக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரசுதன் (வயது 28). இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ஹரிஹரசுதன் பக்கத்து வீட்டில் உள்ள ஐந்து வயது சிறுமியிடம், பூனைக்குட்டி காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.

தொடர்ந்து வீட்டிற்கு சென்றபின் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஹரிஹரசுதன், சிறுமி அழும் சத்தத்தினால் யாரேனும் வந்து விடுவார் என எண்ணி கோபத்தில் சிறுமியின் தலையை சுவரில் அடித்து கொலை செய்ய முயன்றுள்ளான். இருப்பினும் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு கதவை திறக்க முயன்றனர்.

ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால், திறக்க முடியாமல் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுமி தலையில் பலத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகனை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கியதில், பலத்த காயமடைந்த அவரை அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து ஹரிஹரசுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யுமாறு அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், ஹரிஹரசுதன் மீது போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் படுகாயமடைந்த ஹரிஹரசுதன் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #Annur #harassment #girl #pocso
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story